நிகழ் நிலை காப்புச் சட்டமூலத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மனுத் தாக்கல்
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிகழ்நிலை காப்பு தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளன.
தொடர்புடைய சட்டத்தில் நிகழ் நிலை காப்பு தொடர்பான ஆணைக்குழுவை நியமித்தல் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான அதிபருக்குள்ள அதிகாரங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் மேலும் தன்னிச்சையாக செயல்பட முனைதல், நீதிமன்றத்திற்குப் புறம்பான விசாரணை, தண்டிக்கும் அதிகாரம் போன்றன சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவிற்கு உள்ளது.
இதில் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதனால்,இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்ற வேண்டும் என இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெலிகம மாநகர சபையின் முன்னாள் தவிசாளர் ரெஹான் ஜயவிக்ரம ஆகியோரால் இது தொடர்பான மனு இன்று (4) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் அதிபர் சட்டத்தரணி பர்மான் காசிம் முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.