யாழில் வன்முறைக்குழு அட்டகாசம் - தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் (படங்கள்)
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By pavan
பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. அத்துடன் குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
மேற்கொண்டவர்கள் யார்
எனினும் இந்த வன்முறை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் யார் என இதுவரை தெரியவரவில்லை.
இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.







4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்