யாழில் வாள்வெட்டு: 10 நாட்களின் பின் சிக்கிய பிரதான சந்தேக நபர்
யாழ் - வேலணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், பிரதான சந்தேக நபர் 10 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்று (09) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 31ஆம் திகதியன்று வேலணை அராலி சந்திக்கு அண்மையில் காரில் சென்ற ஒருவரை பட்டா ரக வாகனத்தில் சென்ற குழு ஒன்று வழிமறித்து வாளால் வெட்டி கடுங்காயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுச் தப்பிச் சென்றிருந்தது.
காவல்துறையினர் நடவடிக்கை
கடும் காயமுற்ற நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாள் வெட்டுடன் தொடருடைய குழுவை தேடி காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஊர்காவற்றுறை காவல்துறை அதிகாரியான கொன்சாபத்து ஹரிதாஸ் தலைமையிலான அணியினரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேநேரம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களும், விரைவில் கைதுசெய்யப்படுவர் என ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் கைதான பிரதான நபர் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
