நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது பெற்றோல் விலை
Fuel Price In Sri Lanka
Sri Lanka
By Sumithiran
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி, பெற்றோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய , புதிய விலை லீட்டருக்கு ரூபா 400 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தத்துடன், லங்கா ஐஓசியும் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 30 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.
எனினும், ஏனைய ரக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அறிவித்துள்ளது.



ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்