இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சு வெளியிட்ட தகவல்
எரிசக்தி அமைச்சர் திரு காஞ்சன விஜேசேகர இன்று (29) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகிக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் டுவிட்டர் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் 6,600 லீற்றர் ஒட்டோ டீசல் 574 எரிபொருள் தாங்கிகளும், 6,600 லீற்றர் 92 பெற்றோல் 512 எரிபொருள் தாங்கிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன முனைய நிறுவனம் மற்றும் அந்தந்த விநியோகங்கள் பிராந்திய காரியாலயங்களில் இருந்து குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு
1) From 6am to 4pm today, CPSTL has dispatched 574 loads of 6,600 liters of Auto Diesel & 512 loads of 6,600 liters of Petrol 92 from its terminals & regional depots. I thank all the Employees of CPC & CPSTL that had continued to work to dispatch all deliveries recommended for… pic.twitter.com/Xh533ZOt5V
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 29, 2023
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அனைத்துப் பிராந்திய காரியாலயங்களின் பணியாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையான பாதுகாப்பை காவல்துறையினரும் ஆயுதப்படையினரும் தொடர்ந்து வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.