விற்பனைக்கு வரும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் -அமைச்சரவைப்பத்திரம் தயார்
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (செபெட்கோ) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (ஜன. 26) தெரிவித்தார்.
இலங்கைக்கு அன்னியச் செலாவணி சுமை ஏற்படாத வகையில் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு தமது தாய் நிறுவனங்களிடம் இருந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்திற்கு எரிபொருளை கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஐ ஓ சி நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தலா 200 நிறுவனங்களுக்கு வழங்கினால் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அல்லது புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்குமாறு இந்தியன் ஐ ஓ சி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
