பிலிப்பைன்ஸில் 6.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
மத்திய பிலிப்பைன்ஸின்(Philippines) லெய்ட் பகுதியில் 6.0 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது, நேற்று (03.04.2024) மாலை 6.16 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் அதன் பின்னர் பல அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் கடலோர நகரமான துலாக்கில் இருந்து தென்கிழக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்நிலையில், லெய்ட் மாகாணத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதுடன் நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பப்புவா நியூ கினியாவில்(Papua new guinea) உள்ள பங்குனாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பங்குனாவின் மேற்கு- வட மேற்கு திசையில் 153 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |