பிள்ளையானின் வாக்குமூலம்: ஒரு புயலின் தொடக்கம்
கிழக்கு மாகாணத்தின் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று நபர்களின் கைது.
இந்த கைதுகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் நடைபெற்று, 72 மணி நேர விசாரணைக்காக சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள், கல்முனை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் நடந்த குற்றச் சம்பவங்களுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
கல்முனை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் நடந்த கொலைகள், கடத்தல்கள், மற்றும் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக இந்த கைதுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, ஆரையம்பதி பகுதியில் நடந்த இரட்டைக் கொலை, காத்தான்குடியில் சாந்தன் படுகொலை, மற்றும் கல்லடி பாலத்தில் நடந்த பொலிஸ் சக்தியின் கொலை உள்ளிட்ட சம்பவங்களுடன் இந்த கைதுகள் தொடர்புடையவை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்கள், கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் அரசியல் மற்றும் குற்றவியல் பின்னணியை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.
இந்நிலையில் முன்னதாக கிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட பெண் பொறியியளாலரான யோகேஸ்வரன் பிரேமலதா தொடர்பிலும் தற்போது தகவல்கள் வெளியியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக மறைந்திருந்த இவ்வாறான குற்றச் சம்பவங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் அரசியல் களத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
