பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 24ஆம் திகதி வரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொய்க் குற்றச்சாட்டுக்கள்
இன்றைய வழக்கு விசாரணையின் போது பிள்ளையான் இணையவழி தொழிநுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும் அநுரவின் வாயைப் போல அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் என்று கடந்த 30 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் பிள்ளையான் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |