முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிள்ளையான்! மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன் வரையான வீதியை புனரமைத்து தருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சு பதவியினை பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக முல்லைத்தீவுக்கு இன்று(28) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை கிராமத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்.
மக்களுக்கு வாக்குறுதி
குறித்த மக்கள் சந்திப்பில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிராமிய வீதிகள் அபிவிருத்தியின் கீழ் இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதியினை புனரமைத்து தருவதாகவும் மக்கள் மத்தியில் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்