நிறுவன மறுசீரமைப்பு - அரச ஊழியர்களுக்கு விழுந்த பேரிடி!
Government Employee
Government Of Sri Lanka
By Pakirathan
பல அரச நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார் மயமாக்கவும் திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இயந்திர நிறுவனங்கள் மற்றும் பொறியியல் கூட்டுத்தாபனம் போன்றவற்றை ஒன்றிணைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் பணி நீக்கம்
நிறுவன மறுசீரமைப்புக்காக குறித்த நிறுவனங்களின் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் தொடர்ந்து வைத்திருக்கவும், ஏனைய ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை நஷ்ட ஈடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்