விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க திட்டம்

13th amendment TNA Gajendrakumar Ponnambalam
By Vanan Oct 27, 2022 02:56 PM GMT
Report

இலங்கையில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்துள்ள முன்னாள் போராளிகள் குறித்து மக்கள் தெளிவுடன் செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

குறித்த தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் புனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம்

விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க திட்டம் | Plan To Undermine The Sanctity Ltte Struggle

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெறுமனே மக்களிடம் வாக்கு பெறுவதற்கான ஒரு அமைப்பு அல்ல.

எங்களுடைய மக்கள் சில விடயங்களை புரிந்துகொள்ள மாட்டார்கள். நாங்கள் இந்தக் கோணங்களில் பேசினால் விளங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் ஒருசில விடயங்களை புரிய வைக்க நாங்கள் முனைந்திருக்கிறோம்.

அந்தந்த தருணங்களில் சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லித்தான் வந்திருக்கின்றோம். காலப்போக்கில் அவ்வாறு சொல்லப்பட்டவை சரியென நிரூபிக்கப்பட்டும் இருக்கின்றன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஏனைய அனைத்து தரப்பினரும் தமிழ் மக்களினுடைய அரசியலை ஒற்றை ஆட்சிக்குள்ளே - 13ஆம் திருத்தம் அல்லது ஒருமித்த நாடு என்ற திட்டத்துக்குள் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தை முடக்குவதற்கு செயற்படுகின்றார்கள்.

போராட்டத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க திட்டம்

விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க திட்டம் | Plan To Undermine The Sanctity Ltte Struggle

இன்னும் ஒரு தரப்பு இன்று தலை தூக்கப் பார்க்கின்றது. எங்களுக்காக உயிர்த்தியாகம் செய்த, வாழ்க்கையை தியாகம் செய்த போராளிகள் இருக்கின்றார்கள்.

எங்களை பொறுத்த வரையிலே அந்தப் போராளிகள் சாதாரண மக்களையும் விட உயர்ந்தவர்கள்.

ஆனால், அந்த புனிதமான தரப்பின் பெயரை பயன்படுத்தி இன்று ஒரு சிலர் அந்தப் போராட்டத்தினுடைய அடிப்படையினையே மாற்றி அமைப்பதற்கு வேலை செய்கின்றார்கள்.

விடுதலைப் போராட்டத்தினுடைய அடிப்படை நோக்கத்தையே மாற்றுவதற்கு வேலை செய்கின்றவர்கள் உண்மையில் போராளிகள் அல்ல” - என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026