அடக்கி ஆள முற்படும் இலங்கை அரசு! அனைவரையும் அணிதிரள அழைப்பு

srilanka people
By Vasanth Mar 21, 2021 12:37 PM GMT
Report

நாங்கள் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடி வருகின்றோம். தமிழராகிய நாங்கள் இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு ஒருங்கிணைந்த நிலப்பரப்பைத் தாயகமாகக் கொண்ட ஒரு தேசிய இனம். எங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் சகல உரிமையும் எமக்கு உள்ளது.

எமது இந்தப் பிறப்புரிமையைத் தொடர்ச்சியாக மறுதலித்து எம்மை அடக்கி ஆள்வதற்கே இலங்கைத் தேசம் விளைகின்றது. அத்துடன் இலங்கை பேரினவாத அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது நேரடியாகவும், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இவ்வினவழிப்பின் மிகப்பெரும் வெளிப்பாடாக முள்ளிவாய்க்கால் அழிவுடன் உச்சம் தொட்டது. இந்த அழிப்பின் போது இறுதி ஆறு மாதங்களில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். தமிழ் இனத்தின் மீதான படுகொலைகளும், காணாமல் ஆக்கப்பட்படுத்தலும், அவய இழப்புகள், சொத்திழப்புகள் என்பன தொடர்ந்து வந்த நிலையில் இப்போது வடக்கு-கிழக்கை இராணுவ ஆக்கிமிரப்பினூடு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு-கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, தமிழ்த் தேசியத்தைச் சிதைவடையச் செய்து, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை இலங்கை அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது.

சர்வதேச நீதி வேண்டி தொடர்ச்சியாக போராடிவரும் எமது இனம், நடைபெறுக்கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி, பாதிக்கப்பட்ட எமதினத்தின் கோரிக்கைகளான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இலங்கையை பாரப்படுத்படுத்தல் உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து 15/01/2021 கூட்டான கடிதம் ஒன்று சர்வதேசத்தின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சர்வதேச நீதிக்கும், எமது இருப்புக்குமான கோரிக்கைகைகளை முன்வைத்து நடாத்தப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி (P2P) வரை மக்கள் பேரெழுச்சியின் ஊடாக முழு உலகத்திற்கும் இக்கோரிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டது. ஆயின் எமது பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை புறந்தள்ளி, பிரித்தானியா உட்பட்ட மைய அணி (Core Group) நாடுகளினால் முன்மொழியப்பட்ட 46/1 பிரேரணையானது முழு தமிழினத்திக்குமே பெரும் ஏமாற்றத்தினை தந்துள்ளது.

சர்வதேம் கூட எம்மை தொடர்ந்து தமது நலனுக்கு மட்டும் பாவிக்கும் துர்பாக்கிய நிலையை ஆழமாக புரிந்து கொண்டு, எமது நீதிக்கும், உரிமைக்கும் தொடர்ச்சியாக தாயகத்திலும் சர்வதேச அரங்கிலும் தமிழினம் ஓரணியாக நின்று போராட வேண்டி உள்ளது.

பிரித்தானியாவின் காலனித்துவதிலிருந்து விடுபட்ட நாள் முதல், தொடர்ச்சியாக எமது உரிமைக்காக போராடிய தமிழ் இனம், இன்று எம் மீதான இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டியும், இனத்தின் இருப்பை தக்க வைப்பதற்காக்கவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுள்ளது.

ஆயின் எம் மீதான இனவழிபிற்கான பரிகார நீதியினுடாகவே எமது இனவிடுதலைக்கான வாசல் திறக்கப்படும் என்ற தெளிவான புரிதலுடனேயே எமது போராட்டங்கள் தொடர வேண்டும்.

தமிழினத்தின் நியாயமான விடுதலை போராட்டத்தினை கொடும்கரம் கொண்டு பாரிய அழிப்பினுடாக நசுக்கிய இலங்கை அரசானது, தற்போது எமது ஜனநாயக முறையிலான போராட்டங்களை கண்டு அச்சம் அடைந்துள்ளது.

இதன் வெளிப்பாடாக எமது எமது ஜனநாயக போராட்டங்களை எவ்வாறேனும் முடக்க வேண்டும் என்று தடையுத்தரவுகள், வாக்குமூல சேகரிப்புகள், பதிவுகள் எடுத்தல், புலனாய்வு துறை மாற்றும் போலீஸ் மிரட்டல்கள், மனரீதியான அழுத்தங்கள் மூலம் செயல்பாட்டாளர்களை மிரட்ட தொடங்கியுள்ளது.

ஜனநாயக போராட்டங்களை கூட பயங்கரவாதமாக சித்தரிக்க முயல்கின்றது. இந்நிலையை முறியடிக்க, மக்கள் மயப்படுத்தப்பட்ட ரீதியில் அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் பெரும் திரளாக வீதியில் இறங்கி போரடுவதன் மூலமே எமது ஜனநாயக வெளிப்படுதல் எனும் உரிமையையாவது பாதுகாக்க முடியும்.

எமது போராட்டங்கள் கீழ்வரும் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே தொடரும், 1. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) பாரப்படுத்துவதினூடாக, இலங்கை அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான இனவழிப்பு என்பனவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும். 2. தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும்.

இக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்க அனைவரையும் அணிதிரளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023