கோட்டாபயவை பாதுகாத்து மகிந்தவை விரட்டும் திட்டமிட்ட நடவடிக்கை முன்னெடுப்பு
கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவர் பதவியில் வைத்துக்கொண்டு, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சவை நீக்குவதற்காக சில பௌத்த பிக்குகள் மாத்திரமின்றி அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்குவதாக கூறிக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், சமூக ஊடகங்களும் திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
கோட்டாபய ராஜபக்ச அரச தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஆரம்பித்த மக்களின் போராட்டம் தற்போது முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு விரிவடைந்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு அமைய மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகவில்லை என்றால், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்கியது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இணையத்தளங்களின் அச்சுறுத்தும் ரீதியிலான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பின்னணியில் சில திட்டமிட்டு செயற்படும் குழுக்கள் கோட்டாபயவை பாதுகாத்துக்கொண்டு மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பேசப்படுகிறது.
