ரணிலுக்கு ஆதரவு - மொட்டுக்குள் வலுக்கும் எதிர்ப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை
புதிய அதிபரை தெரிவு செய்வதற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வு
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்த கருத்தை நிராகரித்த டொலவத்த, இந்த தருணத்தில் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல, ரணில் விக்கிரமசிங்விற்கு ஆதரவு தெரிவிக்கும் சாகர காரியவசத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை சாகர காரியவசத்தின் கருத்திற்கு பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பீரிஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
