சுதந்திர தின எதிர்ப்பலை! கொழும்பில் அமைதியின்மை - போராட்டக்காரர் மீது தாக்குதல்
Colombo
Galle Face Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
கொழும்பு - மருதானை, எல்பிஸ்டன் மண்டபத்தின் முன்பாக அமைதி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட காலிமுகத்திடல் போராட்டக்காரர் மீது காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தினை எதிர்த்து கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்
இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் தற்போது அமைதியின்மை நிலவிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்