ரணிலிடம் 800 மில்லியன் வாங்கிய சாணக்கியன் - என்ன நடந்தது: அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி.
ரணில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார், ஆனால் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அன்ரனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வெஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட அன்ரனிசில் ராஜ்குமார் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க முடியாது
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அபிவிருத்திக்காக அவருக்கு 400 மில்லியன் ரூபா பணத்தை ஒதுக்கினார். அதில் எருவில் கோடைமடு குளத்தில் பதிவு செய்யப்படாத விளையாட்டு மைதானத்துக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முடிவுற்றதாக காட்டி பணத்தை பெற்றுள்ளார்.
இதேபோன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமல் பூரணப்படுத்தி உள்ளது என நிதி வழங்கப்பட்டது.
இதை அறிந்து நான் இரா.சாணக்கியனுக்கு மற்றவர்கள் போல செம்புதூக்கி மௌனிகளாக கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது மக்களின் வரிப்பணம் இதை வீண் விரயம் செய்ய விடமுடியாது. நான் இந்த நாட்டின் ஒரு குடிமகன் என்ற ரீதியில் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமை.
எனவே தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தேர்தல் திணைக்களத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தேன்.
இதனால் அவர் என்னுடன் காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கான காரணமாக என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி திறக்காமல் இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க முடியாது திறந்திருப்பதை மூடுவதற்கு முயற்சி செய்து என்னை பழி வாங்குகிறார் என எனக்கு நன்றாக தெரியும்.
இது தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் மற்றும் பணிப்பாளருக்கு எழுத்து மூல அறிக்கை சமர்ப்பித்துள்ளேன்.
ஆயுத குழு பாணியில் தமிழரசு கட்சி
எனவே உங்களுடைய இந்த பூச்சாண்டி, அடாவடி அரசியலை விட்டுவிட்டு தமிழரசு கட்சி கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தது அவ்வாறு இருக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அதைவிடுத்து ஆயுத குழுக்கள் போன்று அடாவடியில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அதேவேளை கடந்த காலத்தில் ஆயுத குழுக்கள் எவ்வாறு இருந்ததே அவ்வாறு தமிழரசு கட்சியை இன்று ஆயுத குழு பாணியில் அழைத்துச் செல்கிறீர்கள்? என்ற சந்தேகம் எழுகின்றது.
தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக இரா சாணக்கியனுக்கு 400 மில்லியன் ரூபா ரணில் ஒதுக்கியதாக மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் எழுத்து மூலம் அறிக்கை வந்துள்ளது.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் ரணில் 800 மில்லியன் ரூபாவை இரா.சாணக்கியனுக்கு வழங்கியுள்ளதாக அதற்கான ஆதாரம் உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே மிகுதி 400 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? எங்கே அந்த பணம்? அதேவேளை அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் 3 கோடியே 99 இலச்சம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகல் அறியும் சட்டத்தில் தெரிவிக்கின்றது.
எது எவ்வாறு இருந்தாலும் மாவட்டத்தில் நாளை கஞ்சி குடிப்பதற்கு நமக்கு கஞ்சிக்காவது வழி கிடைக்குமா என ஆயிரக்கணக்கான பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் ஏங்கி தவிக்கின்றனர்.
ஆனால் அபிவிருத்திக்கு ஒதுக்கிய பணத்தை அவர்களின் வாழ்வாதாரத்துக்காக அல்லது அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தாது தேவையற்ற முறையில் முறையற்ற விதத்தில் இந்த பணத்தை உங்கள் ஊரிலே மாத்திரம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை செய்துள்ளார்.
அபிவிருத்திக்கு வந்த பணத்தில் 3 கோடியே 99 லட்சத்து திருப்பி அனுப்பினால் எந்த அரசாங்கமும் மாவட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்காது அதை சுட்டிக் காட்டினால் நாங்கள் குற்றவாளியா? அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை சரியாக பயன்படுத்த தெரியாது விட்ட தவறை சுட்டிக்காட்டிய என்னை பழிதீர்க்க எனது குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒருவருக்கு வழங்க பகிரங்க கேள்வி மனு செய்யுமாறு அரச அதிகாரிகளை அச்சுறுத்தி தவறான முறையில் வழிநடத்துகிறார்.
எனவே இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு தமிழரசு கட்சியின் சரியான பாதையில் செல்லுங்கள் ஆயுத குழுக்கள் போல செயல்பட்டு தமிழரசு கட்சி அகால பாதாளத்துக்கு கொண்டு செல்ல வேண்டாம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

