இனந்தெரியாதவர்களால் வவுனியாவில் காவல்துறை காவலரண் உடைப்பு (படங்கள்)
Sri Lanka Police
Vavuniya
By Sumithiran
வவுனியா பூந்தோட்டம் காவல்துறை காவலரண் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்ததுடன், அச்சந்தர்ப்பத்தில் காவல்துறையினர் எவரும் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





