கொன்று புதைக்கப்பட்ட மக்கள் : புலிகள் தொடர்பில் புனையப்படும் கதைகள்
தேசிய தலைவர் தொடர்பாகவும் கொன்று புதைக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் புனைவுகளை அவிழ்த்து விடுவதுடன் அப்பட்டமான அச்ச வெளிப்பாட்டையும் சமகாலத்தில் காணக்கூடியதாக உள்ளது.
செம்மணி விவகாரத்தில் ஈழத்தமிழர்களின் பக்கச் சார்பை மடைமாற்றி தப்பித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு சிறி லங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளும் அவர்களின் ஒட்டுக்குழுக்களாக செயற்பட்டவர்களும் தள்ளப்பட்டுளனர்.
நாளுக்கு நாள் தொடரும் அகழ்வுப்பணிகளில் மனங்களை ரணங்களாக்கும் முடிவுகள் கிடைக்கப்பெற்று வரும் நிலையில் அமெரிக்கா (United States), பிரித்தானியா (United Kingdom) போன்ற நாடுகளின் பொறுப்புக்கூறல் தொடர்பிலான கோரிக்கைகள் தென்னிலங்கை இனவாதிகளையும் அவர்களின் ஆதரவாக வடக்கில் செயற்படுபவர்களையும் பதற வைத்துள்ள நிலையில்,
இந்ந திலையில் பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட் இந்த விவகாரத்தில் பிரித்தானியாவின் தீவிர ஈடுபாட்டை உறுதிப்படுத்தியதுடன் வலுகட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் விசேட கவனம் செலுத்தி நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து விவாதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும்" கெத்தரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழர் விவகாரமொன்று சர்வதேச மயப்படுத்தப்படுவதனை விரும்பாத சிறிலங்காவின் தென்னிலங்கை தரப்பு நகர்த்துகின்ற காய்கள் தொடர்பாகவும் ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச ஆதரவு தொடர்பிலும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் “இன்றைய அதிர்வு”...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
