அனுமதிப்பத்திர விவகாரம் - பேருந்து உரிமையாளர்களுக்கு இடையில் முறுகல் நிலை
அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகளுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதால் மட்டக்களப்பில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு சகல ஆவணங்கள் மற்றும் தேசிய வீதி போக்குவரத்து ஆணைக்குழு வின் அனுமதிப் பத்திரங்களுடன் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்து உரிமையாளர்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வின் அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு செல்லும் அனுமதிப்பத்திரம், சகல ஆவணங்களும் உள்ள பேருந்திற்கு இடையூறு விளைவித்த மட்டக்களப்பு காவல்துறையினர் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி சட்டவிரோதமாக கொழும்புக்கு செல்லும் தனியார் பேருந்திற்கு தகுந்த பாதுகாப்புடன் உதவி வழங்கியதன் காரணமாக பேருந்தில் பயணம் செல்லும் பிரயாணிகள் அசௌகரியத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று பதிவாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் காவல்துறையினர் இலஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டத்துக்கு முரணான வகையில் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வரிசையில் நின்று எரிபொருட்களை பெற்று மக்களுக்கான சிறந்த சேவைகளை செய்துவருகின்ற போதிலும் தேசிய போக்குவரத்து விதி அனுமதிப்பத்திரம் உள்ள பேருந்து சங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வீதி போக்குவரத்து காவல்துறையினரின் அசமந்தப் போக்கை உயர் அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.




