இந்தோனேசியாவில் கைதான பாதாள உலக கும்பல் : பின்புலத்தில் செயற்பட்ட இந்தியா
இந்தோனேசியாவில் சமீபத்தில் ஐந்து பாதாள உலக நபர்களைக் கைது செய்ய இந்திய அதிகாரிகள் இன்டர்போல் மற்றும் இந்தோனேசிய காவல்துறைக்கு உதவியதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கைது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட காவல்துறை, தேடப்படும் சந்தேக நபர்கள் இலங்கைக்கு மீண்டும் கொண்டு வரப்படும் வரை இந்திய அதிகாரிகள், இன்டர்போல் மற்றும் இந்தோனேசிய காவல்துறை இராஜதந்திர உதவிகளை வழங்கியதாகக் கூறியது.
காவல்துறை மா அதிபரின் நன்றி
வெளிநாட்டில் மறைந்திருந்த தேடப்படும் இலங்கை குற்றவாளிகளைப் பிடிக்க இன்டர்போல், இந்தோனேசிய காவல்துறை மற்றும் இந்திய அதிகாரிகள் உட்பட நடவடிக்கைகளுக்கு உதவிய அனைவருக்கும் காவல் துறைமா அதிபர் (ஐஜிபி) பிரியந்த வீரசூரிய நன்றி தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் மற்றும் ஜகார்த்தா காவல்துறையினர் குழு நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது தேடப்படும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, சனிக்கிழமை (30) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஐந்து பாதாள உலக குழுவினர் கைது
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த, பெக்கோ சமன், பாணந்துறை நிலங்க மற்றும் தெம்பிலி லஹிரு ஆகிய பாதாள உலக பிரமுகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



ஜனாதிபதி தேர்தலில் அநுரவை ஆதரித்த ரணிலும் அதற்காக அவர் கொடுக்கும் விலையும் 19 நிமிடங்கள் முன்
