சிறிலங்கா காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Sumithiran
நாட்டின் பொருளாதார நிலை
எந்தவொரு ஊடக நிறுவனத்திற்கோ அல்லது சமுக ஊடக தளங்களுக்கோ நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்ட காவல்துறையினர், சிறிலங்கா காவல்துறையிடமிருந்து பொருளாதார நெருக்கடி தொடர்பான 22 அம்ச அறிக்கை எனக் கூறும் போலியான அறிவிப்பு தற்போது பரவலாகப் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அறிக்கைகள்
சிறிலங்கா காவல்துறையின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் அதன் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் ஊடாகவும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடிதங்கள் மூலமாகவும் வெளியிடப்படுவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறான பொய்யான தகவல்களுக்கு பலியாக வேண்டாம் என சிறிலங்கா காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


