கொழும்பில் போராட்டகாரர்கள் கைது - காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
கொழும்பு கைது - காவல்துறையின் அறிவிப்பு
இன்றையதினம் (24) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில்,
காவல்துறை கட்டளைச் சட்டம் (1865 ஆம் ஆண்டு இலக்கம் 16) சட்டத்தின் கீழ் சட்டவிரோத ஆர்ப்பாட்டம் காரணமாக போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
எச்சரிக்கப்பட்ட போராட்டகாரர்கள்
போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பல தடவைகள் எச்சரித்ததாகவும், இந்த எச்சரிக்கைகளை மீறி போராட்டக்காரர்கள் பேரணியை தொடர்ந்ததாலும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாலும், உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிக்கும் அபாயம் இருந்ததாலும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
77 ஆண்களும், 4 பெண்களும், 2 பௌத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க கொழும்பின் பல இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்த நிலையில் உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை - டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.