மர்மமாக கடத்தப்பட்ட நபர்: பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறை
நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான் ஒன்றையும் அது தொடர்பான சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த அறிவிப்பானது, காவல்துறையினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்யைில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குளியாபிட்டிய - வெரலுகம பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விடுக்கப்பட்ட் கோரிக்கை
அதன்போது, அப்பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
அதன்படி, NW PK-0125 என்ற சில்வர் நிற சிறிய வான் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த வாகனத்தைப் பார்க்கும் எவருக்கும் உடனடியாக அறிவிக்குமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்காக இரண்டு தொலைபேசி எண்களையும் காவர்துறையினர் அறிவித்துள்ளனர்.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் குளியாபிட்டிய - 071 859 1260, பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக நிலைய பொறுப்பதிகாரி - 077 352 8325
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |