யாழில் பல இடங்களில் மாதா சிலைகள் உடைப்பு - பிடிபட்ட சந்தேக நபர் கூறிய காரணம்
யாழ்ப்பாணம் - மானிப்பாய் காவல்துறை பிரிவில் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் மாதா சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (28) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
அது தொடர்பில், தீவிர விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் காவல்துறையினர், சுதுமலை தெற்கு, சாவல்காடு பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கூறிய காரணம்
கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையில்,
நான் சைவ சமயத்தை சேர்ந்தவன். மனைவி கிறிஸ்தவர். இருவரும் திருமணம் செய்து சில வருடங்களாகி பிள்ளைகள் கிடைக்காத விரக்தியில் இருந்தேன்.
அவ்வேளையில் , “பிள்ளை வேண்டுமென மாதாவிடம் நேர்த்தி வைத்தேன். இருந்தும், பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருந்தேன். இதனால், ஆத்திரத்தில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்“ என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்ப்பிடத்தக்கது.
