வேலியே பயிரை மேய்ந்த கதை- காவல்துறை உத்தியோகத்தர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
மருதானை தாச மஹால் காவல்துறை இல்லத்தில் வசிக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சார்ஜன்ட் ஒருவரின் சுமார் 80,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் அங்கு வசிக்கும் தூதரகப் பிரிவு காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை மருதானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் பம்பலப்பிட்டியில் உள்ள தொலைபேசி வியாபாரி ஒருவரிடம் கையடக்கத் தொலைபேசியை 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 23ஆம் திகதி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மருதானை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம், சந்தேகநபரான கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி