திருடப்பட்ட மோட்டார்சைக்கிளுடன் சுற்றித்திரிந்த காவல்துறை உத்தியோகத்தர் கைது
திருடப்பட்ட டிஸ்கவரி மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கிரான்பாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிற்பயிற்சி காவல்துறை கான்ஸ்டபிள் கிரான்பாஸ் காவல்நிலைய உத்தியோகத்தர் ஆவார்.
கடந்த வருடம் இடம்பெற்ற திருட்டு
சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் பயன்படுத்தியதாக கூறப்படும் இந்த மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் தொம்பேயில் திருடப்பட்டதாக தெரியவந்துள்ளதாக கொழும்பில் உள்ள சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணை
இதன்போது மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தொம்பே காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பயிலுனர் கான்ஸ்டபிள் மற்றும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக தொம்பே காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

