கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடி கைது!
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (20.02.2025) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
நீர்கொழும்பு தலைமையக காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டு குற்றவியல் பிரிவில் பணிபுரியும் இந்த சந்தேக நபர், பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பின்புர தேவகே செவ்வந்தி வீரசிங்கவிடம் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், கைது செய்யப்பட்ட அதிகாரி மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 21 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்