செவ்வந்தியுடன் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளி: வெளியான புகைப்படம்!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அதற்கு உதவியாக செயற்பட்ட தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணும் ஒன்றாக இருப்பதை காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தினுள் பாதாள கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட அவரின் சாரதி மற்றும் காவல்துறை உத்தியோகத்தர் என மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புகைப்படம்
இதேவேளை, துப்பாக்கி சூட்டிற்கு உதவிய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை கைது செய்வதற்காக தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, அதற்கு பொதுமக்களின் உதவியும் காவல்துறையினரால் நாடப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அதற்கு உதவியாக செயற்பட்ட இஷாரா செவ்வந்தியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவவின் இறுதிச் சடங்குகள் இன்று (21) பிற்பகல் பொரளை மயானத்தில் நடைபெற்றன.
படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார்.
அதன்படி, உடலை பிரேத பரிசோதனை செய்து, அவரது தாயாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
