நாட்டை பொறுப்பேற்க தயார் : நாமல் பகிரங்கம்
SLPP
Anura Kumara Dissanayaka
Namal Rajapaksa
By Raghav
தான் எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று (22.02.2025) நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றபோதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விளம்பர நிகழ்ச்சி
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விளம்பர நிகழ்ச்சி நேற்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த நாமல் ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க அரசாங்கம் கலைக்கப்படும் எந்த நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
