இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடக செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.
கூட்டு நடவடிக்கைகள்
இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள், பிராந்திய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில், அவ்விஜயம் பின்னர் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |