ஓமன் மீது குண்டுவீசப்படும்...! ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க அச்சுறுத்தல்
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமெரிக்காவின் நட்பு நாடான ஓமன், அமைதி உடன்படிக்கைக்கு குறுக்கே நின்றால் அந்நாட்டின் மீது குண்டுவீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக வழங்கப்பட்ட 60 நாட்கள் அவகாசம் நிறைவடையும் நிலையில் ட்ரம்பின் இந்த அதிரடி அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது.
இராணுவ நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை சீரமைக்கவும் ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதலைத் தீர்க்கவும் ஓமன் தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.

இருப்பினும், அமெரிக்காவின் திட்டங்களுக்கு ஓமன் தடையாக இருந்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த நிர்ணயிக்கப்பட்ட 60 நாட்கள் கெடு முடிவடையும் தருவாயில் இந்த காரசாரமான பேச்சு பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |