நாடாளுமன்ற முடக்கம்... வெடித்த போராட்டம்: ஸ்பெயினில் அவசரப் பொதுத்தேர்தல் அறிவிப்பு
ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) அவசரப் பொதுத்தேர்தலை அறிவித்துள்ளார்.
நாட்டின் கடுமையான வீட்டுமனை நெருக்கடியைச் சமாளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட முக்கியச் சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் வெடித்துள்ள போராட்டங்கள் காரணமாக அவர் இவ்வறிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படையில் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி ஸ்பெயினில் புதிய பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வாடகை மற்றும் சொத்து விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அவசியமான சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவின்றித் தோற்கடிக்கப்பட்டன.
வாடகைக் கட்டணங்கள்
வீட்டுமனைப் பற்றாக்குறை மற்றும் கட்டுப்படியாகாத வாடகைக் கட்டணங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற முடக்கம் மற்றும் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய மக்கள் ஆணையப் (Mandate) பெற்று ஆட்சி நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில் பிரதமர் சான்செஸ் தேர்தலை முன்னதாகவே நடத்தத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |