யாழில்பெண்ணின் மோட்டார் சைக்கிள் பெட்டியைத் திறந்து நூதனத் திருட்டு!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Theepan Oct 05, 2026 05:01 PM GMT
Report

பூட்டப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் உள்பெட்டியிலிருந்து நூதன முறையில் பணப்பையினைத் திருடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (05-10-2026) மிருசுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மிருசுவில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பை ஒன்றினை அவரது மோட்டார் சைக்கிள் நீண்ட காலமாக வைத்திருந்துள்ளார்.

முல்லைத்தீவில் மாணவர்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்த இ.போ.ச. சாரதி..! கிளம்பியுள்ள எதிர்ப்பு

முல்லைத்தீவில் மாணவர்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்த இ.போ.ச. சாரதி..! கிளம்பியுள்ள எதிர்ப்பு

திருடப்பட்ட பணப்பை

இந்தநிலையில் தனது வேலையின் நிமிர்த்தமாக பொது இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார்.   

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளின் உள்ளே இருந்த பணப்பையினை அடையாளம் தெரியாத சிலர் உட்புற பெட்டியை நூதனமாக திறந்து அதிலிருந்த பல்வேறு ஆவணங்களையும் அதற்குள் இருந்த சுமார் 5000 ரூபாய் பணத்தினையும் அபகரித்துள்ளனர்.

யாழில்பெண்ணின் மோட்டார் சைக்கிள் பெட்டியைத் திறந்து நூதனத் திருட்டு! | Stolen Atm Card Used To Buy Liquor In Mirusuvil

திருடப்பட்ட பணப்பையிலிருந்து தானியங்கி வங்கி அட்டையினை (ATM) மாத்திரம் எடுத்துவிட்டு புத்தூர் கொடிகாமம் வீதியின் வேம்பிராய் சந்தித்திக்கு அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

குறித்த ஆவணங்களை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த புத்தூர் நவக்கிரியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கண்டெடுத்து அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.

அவற்றுள் அடையாள அட்டை, வங்கிப் புத்தகங்கள் மற்றும் சாரதி அனுமதி அட்டை, உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் காணப்பட்டுள்ளன.

ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அவசர கோரிக்கை...!

ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அவசர கோரிக்கை...!

தீவிர விசாரணை

அதனைத் தொடர்ந்து ஆவணங்கள் அடங்கிய பணப்பையினுள் காணப்பட்ட பெண்ணின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தவறவிட்ட பெண்ணிடம் குறித்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் வங்கி அட்டையினை திருடியவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் கடை ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டு கைதடியில் இயங்கும் மதுபான சாலையில் சுமார் 20 ஆயிரத்து 600 ரூபாய்க்கு மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளனர்.

யாழில்பெண்ணின் மோட்டார் சைக்கிள் பெட்டியைத் திறந்து நூதனத் திருட்டு! | Stolen Atm Card Used To Buy Liquor In Mirusuvil

மதுபானங்களை கொள்வனவு செய்ததற்கான விலை சிட்டை குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு குறும் செய்தியாக கிடைத்துள்ளது.

இதற்கிடையில் ஆவணங்களைத் தவறவிட்ட பெண் கொடிகாமம் காவல்துறையில் தனது பணப்பை திருடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஞானசாரதேரருக்கு களையப்பட்டது காவி ஆடை : வழங்கப்பட்டது கைதிகளுக்கான சீருடை

ஞானசாரதேரருக்கு களையப்பட்டது காவி ஆடை : வழங்கப்பட்டது கைதிகளுக்கான சீருடை

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022