களையப்பட்டது காவி ஆடை: பரிதாப நிலையில் ஞானசார தேரர்: நீதிமன்றத்தில் முன்னிலை
புதிய இணைப்பு
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்போது சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் ஞானசார தேரர் சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை குறித்த வழக்கு விசாரணை தொடர்பிலேயே அவர் இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
கலகொடஅத்தே ஞானசார தேரர், மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள மற்றொரு வழக்குக்காக இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், கைதிகளுக்குரிய சீருடை நேற்று முதல் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையருமான சேனக பல்லேவத்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஞானசார தேரர் ஏனைய சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு சிறைக் கைதிகளுக்கான உடை அணிவிக்கப்பட்டே இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |