சற்றுமுன் நாமல் நீதிமன்றத்தில் முன்னிலை
சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று (06) சற்று நேரத்திற்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு கோட்டை பகுதியில் 'கிரிஷ்' திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியை அடிப்படையாகக் கொண்டு, முறைகேடான முறையில் நிதி கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சிலருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி
இதேவேளை, சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்மைய எதிர்வரும் 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |