உயர் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் விசாரணையை திசைதிருப்பிய மர்மங்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Rajapaksa Family
By Dharu Oct 06, 2026 05:43 AM GMT
Report

மறைந்த மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள விசாரணைப் பின்னணிகள் தொடர்பில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

லசந்த விக்ரமதுங்கவின் மனைவி ரெய்ன் விக்ரமதுங்க ஆங்கிலத்தில் எழுதிய Unbowed and Unafraid என்ற சுயசரிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது, லசந்தவின் தனிப்பட்ட வாழ்க்கை, ஊடகப் பணிகள், எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் மற்றும் அவரது குடும்பம் அனுபவித்த துயரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்த்த கசுன் என்பவர் வலைதள  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, லசந்தவின் சிறுவயது முதல் அவரது ஊடகப் பணிக்காலம் வரையிலான பல்வேறு அம்சங்கள் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நீதிமன்ற கைகளுக்கு சென்ற மிக் ஒப்பந்த நகல்: லசந்தவின் மரணத்தை தீர்மானித்த ஒரு ஆவணம்

நீதிமன்ற கைகளுக்கு சென்ற மிக் ஒப்பந்த நகல்: லசந்தவின் மரணத்தை தீர்மானித்த ஒரு ஆவணம்

கடுமையான தாக்குதல்கள்

குறிப்பாக, தைரியமானதும் அன்பானதுமான ஒரு மனிதராக லசந்த எவ்வாறு உருவெடுத்தார் என்பதும், ஊடக சுதந்திரத்துக்காக அவர் எதிர்கொண்ட அழுத்தங்களும் நூலில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் லசந்தவை மையப்படுத்திய பாரதூரமான பல விடயஙகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

“லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், அவர் மீது இரண்டு தடவைகள் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில் அவரது மனைவி ரெய்னும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும், அவர் பணியாற்றிய பத்திரிகை அலுவலகம் மீதும் இரண்டு முறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அவரது ஊடகப் பணியுடனும், அவர் வெளிப்படுத்திய அரசியல் மற்றும் நிதி தொடர்பான தகவல்களுடனும் தொடர்புடையவையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் அக்காலகட்டத்தில் எழுந்திருந்தன.

இதனை தொடர்ந்து 2009 ஜனவரி 8ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். அவர் ஏதோ ஒரு தனிமையான இடத்தில் இரகசியமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமாக இது அமையவில்லை.

இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை

இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை

லசந்தவை மாத்திரம் இலக்கு அல்ல

கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள், பகல் நேரத்தில், பொதுமக்கள் நடமாடிக்கொண்டிருந்த சூழலில் அவர் தாக்கப்பட்டார். கூர்மையான ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் லசந்தவை மாத்திரம் இலக்காகக் கொண்ட செயல் அல்ல என்றும், ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு செய்தியை அனுப்பும் நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று.

 தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை லசந்த விக்ரமதுங்க முன்கூட்டியே உணர்ந்திருந்ததார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நோக்கி அவர் எழுதியதாகக் கூறப்படும் இறுதிக் கட்டுரையில், தனது மரணம் தவிர்க்க முடியாதது என்றும், ஆனால் அது நிகழும் நாள் மற்றும் இடம் தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த எழுத்து, அவரது உயிருக்கு ஏற்பட்டிருந்த அச்சுறுத்தலின் தீவிரத்தை எடுத்துக்காட்டும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகளில், நீதிமன்ற நடவடிக்கைகள், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) மேற்கொண்ட விசாரணைகள் மூலம் பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில், லசந்தவின் ஊடகப் பணிகளுக்கும் இலங்கை - உக்ரைன் இடையிலானதாகக் கூறப்பட்ட MiG கொடுக்கல் வாங்கலுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அரசியல் ரீதியில் விளக்கங்கள் முன்வைக்கப்பட்டது.

எனினும், அது இரு அரசுகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் அல்ல என்றும், தனியார் நிறுவனமொன்றுடன் தொடர்புடையது என்றும் உக்ரைன் தரப்பு மறுத்ததாக கூறப்படுகிறது.

மிக் விமான மோசடி விசாரணை! தயாராகிறது குற்றப்புலனாய்வு திணைக்களம்

மிக் விமான மோசடி விசாரணை! தயாராகிறது குற்றப்புலனாய்வு திணைக்களம்

கொலையாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்

மேலும், லசந்தவின் கொலையை விசாரணை செய்யும் நடவடிக்கையைத் திசைதிருப்புவதற்காக வேறு சில கொலைச் சம்பவங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

குறிப்பாக, வவுனியாவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தொடர்பான சம்பவங்களும் இதில் குறிப்பிடப்பட்டன.

கொலையாளிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்தமை, அப்போதைய காவல்துறைமா அதிபரின் தலையீடு மற்றும் வழக்கில் சாட்சியமளித்ததாகக் கூறப்படும் பிச்ச தேவ சுதாசன் என்பவர் காவலில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தமை உள்ளிட்ட பல விடயங்களும் விசாரணையின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகிறது.

அக்காலகட்டத்தில் ஊடகவியலாளர்களைக் கண்காணிப்பதற்காக விசேட இராணுவப் புலனாய்வுக் குழுக்கள் பயன்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 'திரிபோலி படைப்பிரிவு' உள்ளிட்ட சில விசேட குழுக்கள் தொடர்பாகவும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பழைய ஊடகச் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டும் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.

லசந்த விக்ரமதுங்க தனிப்பட்ட அதிகாரத்தையோ அரசியல் பதவியையோ நாடி போராடவில்லை.

மாறாக, பொதுமக்களின் வரிப்பணம், ஊழல் தொடர்பான கேள்விகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காகவே அவர் தனது ஊடகப் பணியை முன்னெடுத்தார். போராட்டத்தின் போதே தனது உயிரை இழந்தார்.

லசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அந்தக் கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் யார், அதற்கான உத்தரவை வழங்கியவர்கள் யார், விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சிகள் இடம்பெற்றனவா என்பன போன்ற கேள்விகளுக்கு முழுமையான பதில் கிடைப்பது இன்னும் முக்கியமானதாகவே உள்ளது.

அவரது படுகொலை தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுவதும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படுவதும் இலங்கையின் ஊடகச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான முக்கியமான பரிசோதனையாக அமையும்” என விவாதிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026