ஹோர்முஸ் நீரிணையில் முடங்கும் கப்பல் போக்குவரத்து...! வெளியான அறிக்கை
கடந்த வாரத்தில் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து 19.5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெப்லர் (Kpler) என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் பத்தாம் திகதியுடன் தொடங்கிய வாரத்தில் மொத்தம் 95 கப்பல்கள் மட்டுமே இந்தக் கடல் வழியைக் கடந்துள்ளதாகவும், ஆகஸ்ட் 16 அன்று இந்த எண்ணிக்கை வெறும் மூன்றாகச் சரிந்தது என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கண்காணிப்புக் கருவி
கப்பல்கள் இந்த நீரிணையின் ஈரானியப் பகுதி அல்லது வரைபடத்தில் இல்லாத மாற்று வழிகளைப் பயன்படுத்தியதாகவும் அதேவேளையில் ஹோர்முஸ் TSS அல்லது ஓமன் வழிகள் வழியாக எந்தக் கப்பல்களின் பயணமும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இப்பராந்தியத்தின் மற்றொரு முக்கிய கடல் வழியான பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் அப்பகுதியில் நிலையற்ற பாதுகாப்புச் சூழல் நிலவியபோதிலும் அதைக் கடந்து சென்ற கப்பல்களின் எண்ணிக்கை 6.7 வீதம் அதிகரித்து 254 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில் கண்காணிப்புக் கருவிகளை அணைத்துவிட்டு ரகசியமாகப் பயணித்த (Dark transits) கப்பல்களின் எண்ணிக்கை 40-லிருந்து 16 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |