மன்னார் கடற்கரையிலும் ஆணின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Mannar
Sri Lanka Police Investigation
By Independent Writer
Courtesy: nayan
தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண் ஒருவரின் சடலம் மீன்பிடி வலையினால் சுற்றப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (17) காலை கரை ஒதுங்கியுள்ளது.
கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் சடலத்தை இன்று திங்கட்கிழமை (17) காலை அவதானித்து தலைமன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் தலைமன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் சடலம்
சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலம் தொடர்பாக தலைமன்னார் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்