படைகளைத் திரும்பப் பெற முடியாது! நெதன்யாகுவின் முடிவால் தொடரும் முட்டுக்கட்டை
ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் களையும் வரை காசாவிலிருந்து தனது படைகளில் எதையும் திரும்பப் பெறப்போவதில்லை என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னரிடம் நெதன்யாகு இக்கருத்தை தெரிவித்துள்ளதாக மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சீரமைப்புப் பணிகளைத் தொடங்க அனுமதிக்கப்போவதில்லை என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சமாதான வாரியம்
சிதைந்துபோயுள்ள காசா முனையை ராணுவமயமற்றதாக மாற்றுவதற்கான முதல் கட்டமாக, ஹமாஸின் ஆயுதங்களைக் கலைக்கும் நடவடிக்கையை அமெரிக்க ஜெனரல் ஒருவர் மேற்பார்வையிடுவார் என்பதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் சமாதான வாரியத்தின் (Board of Peace) இயக்குநர் நிக்கோலே மிலாடெனோவ் மற்றும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |