தையிட்டி குறித்து பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு : விசாரணைக்கு அழைக்கப்பட்ட யாழ் ஊடகவியலாளர்கள்

Sri Lanka Police Jaffna Journalists In Sri Lanka
By Shalini Balachandran Feb 21, 2025 11:39 PM GMT
Report

யாழில் (Jaffna) இரண்டு ஊடகவியலாளர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் பலாலி காவல்துறையினர் சுமார் ஆறு மணி நேரம் குறித்த தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் (Gajendrakumar Ponnambalam) பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன.

ஆயிரக்கணக்கிலான தமிழ் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திய பிரான்ஸ்

ஆயிரக்கணக்கிலான தமிழ் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திய பிரான்ஸ்

பதிவு போலியானது

குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன் , ஊடக சந்திப்பொன்றினையும் நடாத்தி அது போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார்.

தையிட்டி குறித்து பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு : விசாரணைக்கு அழைக்கப்பட்ட யாழ் ஊடகவியலாளர்கள் | Police Question Jaffna Journalists

இந்நிலையில், கடந்த வாரம் விகாரையை இடிக்க வாரீர் என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இதையடுத்து, யாழ்.பிராந்திய ஊடகவியலாளர்களான கந்தசாமி பரதன் மற்றும் தம்பித்துரை பிரதீபன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள், வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி காவல் நிலையத்தின் உப காவல்துறை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான கட்டத்தில் போப் பிரான்சிஸ் உடல் நிலை

ஆபத்தான கட்டத்தில் போப் பிரான்சிஸ் உடல் நிலை

உயர் பாதுகாப்பு

இதன்பின், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன் அவர்களிடம் சுமார் ஆறு மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டனர் .

பின்னர் , குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது நீதிமன்றுக்கு சமூகமளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

அதேவேளை தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி காவல்துறையினர் வாக்கு மூலம் வழங்க பலாலி காவல் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

கொரோனா போல மீண்டும் சீனாவில் உருவெடுத்துள்ள மற்றுமொரு வைரஸ்

கொரோனா போல மீண்டும் சீனாவில் உருவெடுத்துள்ள மற்றுமொரு வைரஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024