கொரோனா போல மீண்டும் சீனாவில் உருவெடுத்துள்ள மற்றுமொரு வைரஸ்

COVID-19 China World
By Shalini Balachandran Feb 21, 2025 08:37 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

சீனாவில் (China) புதிய வகை வௌவால் கொரோனா வைரஸ் என்ற வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புக்கள் : வெளியான தகவல்

பிரித்தானியாவில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புக்கள் : வெளியான தகவல்

கொரோனா வைரஸ்கள்

வௌவால் கொரோனா வைரஸ்கள் குறித்து ஷி ஷெங்லி மேற்கொண்ட ஆய்வுகளில் வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சுயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங்சூ ஆய்வகம் மற்றும் ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுகின்ற நிலையில், இந்த வைரஸ் ஜப்பானை சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் காணப்பட்டது.

கொரோனா போல மீண்டும் சீனாவில் உருவெடுத்துள்ள மற்றுமொரு வைரஸ் | New Type Of Corona Virus Spreading Again In China

இந்த வைரஸூம் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளதாகவும், இதுவும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் ACE 2, அதாவது முந்தைய சார்ஸ்-கோவி-2 வைரஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வௌவால் ACE 2 மட்டுமின்றி மனித ACE 2 மற்றும் வெவ்வேறு இனங்களின் மரபணுக்களை பாதிக்கும் ACE 2 வகையை சேர்ந்த HKU5-CoV-ஐ கண்டுபிடித்திருப்பதை அறிவிக்கிறோம் என சீன குழு இதழ் ஒன்றில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு e-விசா சேவையை மீண்டும் தொடங்கிய உக்ரைன்

வெளிநாட்டவர்களுக்கு e-விசா சேவையை மீண்டும் தொடங்கிய உக்ரைன்

மனிதர்களிடத்திலும் பாதிப்பு

இந்த வைரஸை வௌவால்களில் இருந்து தனிமைப்படுத்தினால், அவை மனிதர்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வைரஸ் மனிதர்களுக்கு சுவாசம் மற்றும் குடல் உறுப்புகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா போல மீண்டும் சீனாவில் உருவெடுத்துள்ள மற்றுமொரு வைரஸ் | New Type Of Corona Virus Spreading Again In China

கொரோனா வைரஸ் தொற்று உருவானது எப்படி என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், சீன ஆய்வகத்தில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக உலகளவில் நம்பப்படுவதுடன் இதுதவிர கொரோனா வைரஸ் வௌவால்களில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதாக வெளியான தகவல்களை ஷி திட்டவட்டமாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்சார கட்டணம் தொடர்பில் எச்சரித்த கம்மன்பில

மின்சார கட்டணம் தொடர்பில் எச்சரித்த கம்மன்பில

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023