வெளிநாட்டவர்களுக்கு e-விசா சேவையை மீண்டும் தொடங்கிய உக்ரைன்
வெளிநாட்டவர்களுக்கு e-விசா சேவையை உக்ரைன் (Ukraine) மீண்டும் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் வெளியுறவுத்துறை, இந்தியா (India), பூட்டான் (Bhutan), மாலைத்தீவு (Maldives) மற்றும் நேபாளம் (Nepal) உள்ளிட்ட 45 நாடுகளின் குடியுரிமையாளர்களுக்கு E-Visa சேவையை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.
இச்சேவை பிப்ரவரி 19, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தேவை
கல்வி, சுற்றுலா, வணிகம், கலாச்சாரம், அறிவியல், பத்திரிகை, விளையாட்டு மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக பயணிக்க விரும்புவோர் இதன் மூலம் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை நுழைவு விசாவை 20 டொலருக்கும் மற்றும் இரட்டை நுழைவு விசாவை டொலருக்கும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர விசா
அவசர விசா விண்ணப்பத்துக்கு இரட்டை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அத்தோடு வழக்கமான விண்ணப்பங்கள் மூன்று நாட்களில் மற்றும் அவசர விசாக்கள் ஒரே நாளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம், இந்தியா (India) மற்றும் உக்ரைன் இடையேயான வர்த்தகம், கல்வி, மருந்துகள், பாதுகாப்பு மற்றும் கலாச்சார தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக உக்ரைன் மருத்துவக் கல்விக்காக இந்திய மாணவர்கள் அதிகம் பயணிக்கும் நாடாக இருப்பதால், இ-விசா வசதி அவர்களுக்கு பயனளிக்கும் என தெரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
