கடமையில் இருந்த காவல்துறை அதிகாரியை மோதித்தள்ளிய வான்
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Police Investigation
By Sathangani
களுத்துறையில் (Kalutara) கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி வான் ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
களுத்துறை வடக்கு காவல்துறை பொறுப்பதிகாரியும், தலைமை கண்காணிப்பாளருமான துசார சில்வா, சிறப்பு சோதனை நடவடிக்கை பணியில் ஈடுபட்டிருந்தபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்தபோது, வஸ்கடுவ, வாடியமன்கட பகுதியில் நேற்று (22) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வானின் சாரதி கைது
காயமடைந்த காவல்துறை அதிகாரி சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாணந்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விபத்துடன் தொடர்புடைய வான் காவல்துறை காவலலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி