பாதாள உலகக் குற்றவாளிகள் கைது :காவல்துறைக்கு கிடைக்கப்போகும் வெகுமதி
போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் குற்றவாளிகள் கைது, கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், உளவாளிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு ஒரு பில்லியன் ரூபாய் வெகுமதித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (21) தெரிவித்தார்.
விருது வழங்கும் விழா நவம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற உள்ளது.
தம்மை அர்ப்பணித்து பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள்
தென் மாகாணத்தில் சமீபத்திய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் சோதனைகள், பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டுபிடித்தல் ஆகியவற்றில் தங்கள் கடமையை அர்ப்பணித்த அதிகாரிகளுக்கு இநந்த விருதுத் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த சோதனைகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்கும் தகவல் அளிப்பவர்களுக்கும் வெகுமதிகள் வழங்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 2 மணி நேரம் முன்
