இவரைத் தெரியுமா! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
தேடப்படும் சந்தேக நபர் ஒருவர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தெஹிவளை, காலி வீதி, பீட்டர்ஸ் பாதையில், 2026 ஜனவரி 9 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை அடையாளம் காணவே மேற்படி உதவி கோரப்பட்டுள்ளது.
தெஹிவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு, நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
புகைப்படம்
இந்த நிலையில், சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், குற்றம் செய்ய வந்த துப்பாக்கிதாரியின் புகைப்படம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள சந்தேக நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071-8596408 என்ற தொலைப்பேசி இலக்கத்தின் மூலம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |