வவுனியாவில் அதிக பனிமூட்டம்! அவதிக்குள்ளாகும் சாரதிகள்
புதிய இணைப்பு
வவுனியாவில் அன்மைய நாட்களை விடவும் இன்றையதினம் (22) சற்று அதிக பனிமூட்டம் நிலவுகின்றது.
கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமையை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என சாரதிகளுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதனை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் வழமையாக அதிகளவில் விபத்துக்கள் இடம்பெறுவதனால் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஹட்டனில் இடம்பெற்ற விபத்து
இதேவேளை, ஹட்டன் (Hatton) மல்லியப்பு பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் சாரதியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமரா அமைப்பினூடாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 53 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |