வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட ஆசிரியர்..! காவல்துறையில் வாக்குமூலம்
செவ்வாய்க்கிழமை இரவு காணாமல் போன காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.சி.அஜ்வத் ஆசிரியர் நேற்று முன்தினம் (08) வியாழக்கிழமை காலை வீடு வந்து சேர்ந்ததாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவரை வெள்ளை வாகனத்தில் இனம் தெரியா சிலர் கடத்தி கப்பம் கோரியதாக காத்தான்குடி காவல் நிலையத்தில் குறித்த ஆசிரியர் வாக்கு மூலமளித்துள்ளார்.
காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.சி.அஜ்வத் ஆசிரியர் காணாமல் போயுள்ளதாக செவ்வாய்க்கிழமை இரவு அவரது உறவினர் காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
51 வயதான காத்தான்குடியைச் சேர்ந்த ஆசிரியர் அஜ்வத் ஒள்ளிக்குளம் அல்ஹம்றா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை ஆற்றி வருகின்றார்.
சம்பவத்தின் பின்னணி
செவ்வாய்க்கிழமை மாலை அவரது பாலமுனையில் உள்ள காணிக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இவரை உறவினர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இவரின் கையடக்க தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி காவல்துறையினருக்கு தெரியப்படுத்தி உறவினர் முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையில் காத்தான்குடி காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையிலான காவல்துறையினரின் குழுவொன்று விசாரணை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று(08) வியாழக்கிழமை காலை வீடு வந்துள்ளார். இதனையடுத்து இவர் காத்தான்குடி காவல் நிலையத்துக்கு சென்று தனக்கு நடந்த நிலைமையினை காத்தான்குடி காவல்துறையினருக்கு தெரியப்படுத்தி வாக்குமூலமளித்துள்ளார்.
குறித்த செவ்வாய்க்கிழமை இரவு காத்தான்குடி முகைதீன் மெத்தை ஜும்ஆப்பள்ளிவாயல் வீதியில் வைத்து தான் சென்ற மோட்டார் சைக்கிளை விட்டு வலுக்கட்டாயப்படுத்தி இறக்கி வெள்ளை வாகனம் ஒன்றில் இனம் தெரியாத சிலர் தன்னை கடத்திச் சென்றதாகவும் தனது முகம் கால், கை என்பன கட்டப்பட்ட நிலையில் தன்னை கடத்தியதாகவும் தன்னிடம் கப்பம் கோரியதாகவும் பின்னர் தன்னை எங்கு கொண்டு சென்றார்கள் என்பது எனக்கு தெரியாது எனவும் தன்னை கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே வைத்திருந்ததாகவும் மாவிலங்கதுறையில் வைத்து வியாழக்கிழமை காலை 7.15 மணியளவில் தன்னை இறக்கி விட்டு சென்றதாகவும் இவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இவரது இந்த சம்பவம் காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் காத்தான்குடி காவல்துறையினர் துரித விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். குறித்த அஜ்வத் ஆசிரியரின் முகத்தில் காயங்கள் காணப்படுவதால் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் முழமையான வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனையில் காத்தான்குடி காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் துரிதமான விசாரணைகளை தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
