போராட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; காவல்துறைமா அதிபர் எச்சரிக்கை
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இன்றைய தினம் போராட்டங்களில் ஈடுபடும் எந்தவொரு தரப்புக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
போராட்டங்களின் தன்மையை பொறுத்து உரிய நடவடிக்கைகள் உடனடியாகவே எடுக்கப்படும் என கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.
காவல்துறைமா அதிபரின் எச்சரிக்கை
போராட்டங்கள் குறித்து காவல்துறையினர் ஒரு போதும் பதற்றமடைய போவதில்லை என்றும், போராட்டங்கள் எல்லை மீறும் சந்தர்ப்பங்களில் உடனடியாக சட்ட நடைமுறைகள் நடைமுறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ஏ.ஜீ.ஜே சந்திரகுமார விடுத்துள்ளார்.
போராட்டங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்ப்பு போராட்டங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.