ஜே.வி.பி ஆட்சியைக் கைப்பற்றினால் முழு நாட்டிற்கும் ஆபத்து - ரணில், சஜித் இணைய வேண்டும்!
"ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பிரிவினை காட்டாமல் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்."
இவ்வாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர்,
"கட்சி பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நேரமே இது, அதனால் தான் பொது இணக்கப்பாட்டுடன் நிதி பற்றிய குழுவின் தலைமைப் பதவியை ஏற்க நினைத்தேன்.
கட்சி விட்டு கட்சி தாவும் எண்ணம் எனக்கு கிடையாது, ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் என்பதே எனது கனவு.
ஜே.வி.பி. ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை, அவர்கள் ஆட்சியை கைப்பற்றினால் முழு நாட்டிற்கும் ஆபத்து.
அதனால் தான் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைய வேண்டும் என நினைக்கின்றேன்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
